1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:57 IST)

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. சற்றுமுன் பேரவை செயலாளரிடம் திமுக இந்த மனுவை அளித்துள்ளது
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் சபாநாயகரின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள், கருணாஸ் மற்றும் அவரது ஆதரவு  எம்.எல்.ஏக்கள், இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் தினகரன் எம்.எல்.ஏ ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.