திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST)

என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி

திமுகவின் நாத்திக பேச்சால் தான் அக்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து கொண்டே போகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தமிழகத்தில் 95% ஆத்திகவாதிகள் இருக்கும் நிலையில் வெறும் 5% நாத்திகவாதிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதால் தான் அக்கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி, 'கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்றும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இந்த பேச்சால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடவுள் மறுப்பு கொள்கையை கைப்பிடிக்கும் திமுக உள்பட அனைத்து கட்சிகளும், இந்து கடவுள்களை மட்டுமே தாக்கி பேசுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. திமுக தனது கடவுள் மறுப்பு கொள்கையை மனதளவில் வைத்து கொண்டு வெளியில் பேசாமல் இருப்பதே அக்கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.