பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

pongal
Last Updated: ஞாயிறு, 14 ஜனவரி 2018 (11:36 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தனது ஆட்சி காலத்தில் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என அறிவித்தவர் கருணாநிதி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். நீண்ட நாட்களுக்கு கருணாநிதியை சந்திப்பதால், ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :