Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்

kanimozhi
Last Modified புதன், 10 ஜனவரி 2018 (10:26 IST)
திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவிலை இழிவுபடுத்தி பேசியதாக கனிமொழி எம்.பி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல் எனக் கூறியுள்ளார். அவர் இவ்வாறு பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்து மக்கள் கட்சியினர், கனிமொழி கூறிய கருத்து, 150 கோடி இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்புள்ள எம்.பி இப்படி கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் இந்துக்களின் மனதை புண்படுத்திய கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :