புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (11:06 IST)

ஆழ்ந்த வருத்தமா? யாரு பார்த்த வேலைடா இது? - வைரல் போஸ்டர்

நடிகர் விஷால் தொடர்பான ஒரு சுவர் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு பல களோபரங்கள் மற்றும் திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில், விஷாலின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ஓட்டிய போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் எதிர்காலமே என போஸ்டரின் மேல் பகுதியிலும், என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதை வைத்து விஷயத்தை முன்பே தெரிஞ்சுதான் போஸ்டர் ஒட்டியிருக்கானுங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
ஆனால், போஸ்டரை உற்றுப்பார்த்தால், அந்த போஸ்டருக்கு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரின் கீழ்ப்பகுதிதான் அது என்பது தெளிவாக தெரிகிறது.