Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேர்தல் அதிகாரியை மாற்றுங்கள்: திருமாவளவன்

Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (11:05 IST)
நேற்று நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பங்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன
குறிப்பாக விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகையில், 'விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என்பதற்கு விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு ஒரு சான்றாக இருப்பதாகவும், விஷால் பெரும்பான்மை வாக்குகளை பெற்று தங்கள் வெற்றிக்கு இடையூறாக இருப்பார் என்று ஆளுங்கட்சி நினைத்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :