திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (13:24 IST)

கொரோனா மரணம்: மக்கள் பீதியை போக்க விஜயபாஸ்கர் விளக்கம்!

கொரோனாவால் மரணமும் அதிகரித்து வருவது மக்களுக்கு பீதியை அதிகரித்த நிலையில் விஜய பாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5950 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 338,055 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 
 
சென்னையில் மட்டும் 1,196 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,650ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்தது. கொரோனாவால் மரணமும் அதிகரித்து வருவது மக்களுக்கு பீதியை அதிகரித்த நிலையில் விஜய பாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, கொரோனா தொற்று உயிரிழப்பு என வெளியாகும் தரவுகளில், 10 சதவீதம் மட்டுமே நேரடியாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள். இந்த இறப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பீதி அடைய வேண்டாம். 
 
மீத 90% பேர் வெவ்வேறு நோய்களைக் கொண்டவர்கள். குறிப்பிடப்பட்டவர்கள் உயிரிழப்பையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிக்காட்டுதல்படி, கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.