விஜயகாந்த் மகனுக்கு தேனியில் சீட் – தேமுதிக வினர் தீர்மானம் !
விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு தேனி தொகுதியில் சீட் கொடுக்க வேண்டும் என தேமுதிக வின் செயல் வீரர்கள் கூடட்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
திமுக, அதிமுக என இருக் கட்சிகளிலும் மாறி மாறிக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அதிமுகவோடு தொகுதிப் பங்கீடு மட்டும் சரிசெய்யப்பட்டு விட்டால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என்ற நிலையில் உள்ளது. அதற்காக கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
இன்னும் கூட்டணியே உறுதியாக வில்லை. எனவே தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விவரமும் இன்னும் தெரியவில்லை, ஆனாலும் தேனித் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு சீட் கொடுக்க வேண்டும் உசிலம்பட்டியில் நட்ந்த தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபகாலமக விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாத போது கட்சிக் கூட்டங்களிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் விஜயகாந்திற்குப் பதிலாக அவரின் மகன் விஜய பிரபாகரனெ முன்னிறுத்தப்படுகிறார். தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.