புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:03 IST)

மீரா மிதுன் மீது போலீஸில் புகாரளித்த விஜய் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் நெபோடிசம் உள்ளதாகவும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தையும், விஜயையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான மீராமிதுன் திரைத்துறையில் உள்ளோரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக அவர் விஜய் மற்றும் சுர்யாவைப் பற்றிப் பதிவிட்டது அவர்களது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை மீரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறைதுறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கப்படுள்ளது.

அதில்,நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி தவறாக பேசிவரும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரப்பட்டுள்ளது.