வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (21:02 IST)

தமிழ் சினிமாவில் நெபோடிசம் ? மீரா மிதுன்னு கஸ்தூரி பதிலடி !

சிறந்த இசை, பாடல் போன்றவற்றிற்கு ஆஸ்கர் விருதை வென்று ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அப்படியானவருக்கே பாலிவுட் திரையுலகம் வாய்ப்புகள் மறுப்பதாக அவரே சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரகுமான் சொன்னத்து உண்மைதான் என தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி. 

அதாவது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து டோலிவுட்டிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என பேச்சுக்கள் எழுந்தது. 

டோலிவுட்டோடு நிற்காமல் கோலிவுட் பக்கமும் இது திரும்பியுள்ளது. ஆம், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி என்கிற நடராஜ் தமிழ் சினிமாவில் க்ரூபிஸம் உள்ளதாக கூறினார். இவரை தொடர்ந்து தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனு இது குறித்து மனம் திறந்துள்ளார். 

சாந்தனு கூறியதாவது, வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  தமிழ் சினிமாவில் நெபோடிசம் உள்ளதாகவும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தையும், விஜயையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதுகுறித்து நடிகை மீரா மிதுன்னு நடிகை கஸ்தூரி பதிலடிகொடுத்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

அதில், விஜய் ,சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்றோர்  தங்களின் உதவியால் சினிமாவுக்குள் நுழைந்தவர்களே தவிர தங்களிம் திறமையால்  உயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் நெபோடிசன் கிடையாது என தெரிவித்துள்ளார்.