ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார்... அடித்து சொல்லும் உதயநிதி!!
உண்மை தெரிந்த பிறகு ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திராவிட கழகத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது நான் செய்திகளில் வெளிவந்ததைத்தான் கூறினேன் என் ஆதாரத்தை காட்டி இதற்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு பராட்டுகளும் விமர்சனங்களும் வந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடன் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என கூறியது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்...
ரஜினி அரசியலுக்கு வந்த பிறகுதான் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கலாம். முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். இதற்கு முன்னர் காவிரி விவகாரத்தில் இது போன்று தெரியாமல் பேசிவிட்டு பின்னர் கர்நாடக சென்று மன்னிப்பு கேட்டார் என நினைக்கிறேன். அது போல இந்த விஷயத்திலும் உண்மை தெரிந்த பிறகு ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என தெரிவித்துள்ளார்.