குடியுரிமை சட்டம் குறித்து ஏன் பேசவில்லை?? ரஜினியை கேள்வி கேட்கும் கார்த்திக் சிதம்பரம்
குடியுரிமை சட்டம் குறித்து பேசாமல் ஏன் ரஜினி பெரியாரை பற்றி இப்போது பேச வேண்டும்? என கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில், “1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ராமர் மற்றும் சீதை படங்கள் ஆடையில்லாமல் இடம்பெற்றிருந்தன” என பேசியது சர்ச்சையை கிளப்பினார். இதனை தொடர்ந்து ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட கழகத்தினர் கூறிவருகின்றனர்.
இது குறித்து ரஜினிகாந்த் தான் மன்னிப்பு கேட்கமுடியாது என கூறிய நிலையில் கார்த்திக் சிதம்பரம், “குடியுரிமை சட்டத்தை குறித்தும் மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்தும் பேசாத ரஜினிகாந்த், பெரியாரை குறித்து ஏன் பேச வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், நடைமுறையில் உள்ள இன்றைய நிகழ்வுகளுக்கு ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.