வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (18:47 IST)

ரூ.7,700-ல் இருந்து 14 ஆயிரம்: செவிலியர்களின் ஊதியம் அதிரடி உயர்வு

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ஊதிய உயர்வு கேட்டு பல மாதங்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது அவர்களுடைய ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்கள் தற்போது ஊதியமாக ரூ.7,700 மட்டுமே வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அவர்களது ஊதியம் தற்போது ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளத்தை பெறவுள்ளனர்.
 
சேவை மனப்பான்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பணி செய்து கொண்டிருக்கும் செவிலியர்களுக்கான இந்த ஊதிய உயர்வு சரியானதே என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.