எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காரணம் யார்? தமிழிசை-பொன்னார் கருத்துவேறுபாடு

Last Modified வெள்ளி, 6 ஜூலை 2018 (07:59 IST)
தமிழகத்தின் கனவுகளில் ஒன்றாகிய எய்ம்ஸ் மருத்துவமனையில் மதுரையில் உள்ள தோப்பூர் பகுதியில் வரவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது என்ற வாக்குவாதமும் அரசியல் கட்சியினர்களிடையே இருந்து வந்தது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது என்ற கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதற்கு அதிமுகவும் பாஜகவும் தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார்.

ஆனால் இந்த கருத்துக்கு எதிரான கருத்தை சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளார். அவர், 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது பாஜக தலைமையிலான மத்திய அரசு மட்டுமே. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது' என்று கூறியுள்ளார். இந்த விசயத்தில் பொன்னார் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை தமிழிசை கூறியுள்ளதால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :