வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (21:59 IST)

நடிகை குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன் பதிலடி

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் குஷ்பு கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்த கராத்தே தியாகராஜன், 'குஷ்பு கூறியபடி காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இப்போதைக்கு மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மேலும் அன்னை சோனியா காந்தி குறித்து தரக்குறைவாக பேசி, அவருக்கு துரோகம் செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்றும், அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 90% தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

பாஜகவின் முக்கிய பிரமுகராக இருந்த திருநாவுக்கரசரே தமிழக காங்கிரஸ் தலைவராக மாறியிருக்கும் நிலையில் பீட்டர் அல்போன்ஸ் ஏன் தலைவராக கூடாது என குஷ்பு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என சர்ளமாக பேச தெரிந்த குஷ்புவை தலைவராக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.