1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:53 IST)

செயற்கை மழை ஐடியா என்ன ஆனது? தமிழிசையை கலாய்த்த திருநாவுக்கரசர்

செயற்கை மழையை வரவழைத்தாவது தாமரையை மலர வைப்போம் என கூறியை தமிழிசையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார்.
 
ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல்  முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன.  பாஜக மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது. தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
சமீபத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செயற்கை மழையை வரவழைத்தாவது எப்படியாவது தாமரையை மலர வைப்போம் என கூறினார்.
 
இந்நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்த 5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்திருப்பது, மக்கள் பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் பிரதிபலிப்பு. காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி நாங்களே வெற்றி பெறுவோம்.
 
எப்படியாவது செயற்கை மழையை வரவழைத்து தாமரையை மலர வைப்போம் என கூறியை தமிழிசை தற்பொழுது எங்கே போனார்?  மக்கள் கொடுத்த இந்த பாடத்திலாவது இனி பாஜக உருப்படியாக செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.