வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (12:52 IST)

விஷால் விவகாரத்தில் அரசியல் தலையீடு: குஷ்பூ புது டிவிஸ்ட்

விஷாலை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டது, அவரை கைது செய்தது அனைத்தும் ஜன நாயகத்திற்கு எதிரானது என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளளுமான குஷ்பு பேட்டி அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் பின்வருமாறு, விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு எதிரணியிடம் ஆதாரங்கள் இல்லை. உயர் நீதிமன்றத்தை நாடியதன் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்தது. 
 
அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை அங்கு எப்படி வந்தது? எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக, ஒருவர் அதிமுக என்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் நடந்த சம்பவம் இருந்தது என தெரிவித்துள்ளார். 
 
மேலும், ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி. ஆனால் இதுவரை ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரசில் இருந்து யாரும் சொல்லவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.