வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (16:25 IST)

இணையதள குற்றத்தைத் தடுக்க நீதிமன்றம் புதிய உத்தரவு

சமூக வலைதள நிர்வாகிகளில் அண்மைக்காலமாக இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள பிரதிநிதிகளுடன் பேசு ஆலோசிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு புலனாய்வு அமைப்புகள் கோரும் விவரங்கள் தர தயாராக உள்ளோம் என்று கூகுள், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
 
இந்நிலையில் குற்றங்களை தடுக்க சமுக வலைத்தள நிறுவன பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் அலோசிக்க வேண்டும் என்றும், பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர ஆணையிட்டுள்ளது.

மேலும் மே 20 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை ஆலோசனை நடத்த தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கக்கோரி கிளமெண்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.