வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (09:57 IST)

இன்னொரு வாய்ப்பு வேண்டுமா பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க...?

மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க 2019 மார்ச் 31 தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. நேற்றோடு தேதி முடிந்தும் இன்னும் பலர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்ததாக தெரிவில்லை. 
 
எனவே, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வருமான வரித்துறை வழங்கியுள்ளது. ஆம், இந்த கால அவகாசம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  
 
அதாவது, இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பான் மற்றும் ஆதாரை இணைக்காவிட்டால் என்னவாகும்? 
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. 
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும். 
 
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால் வருமான வரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையபக்கத்திற்கு சென்று இணைக்கவும்.