வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (15:16 IST)

’இரு பிரபல கட்சிகளின் ’கூட்டணி முறிவு : அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்த சமாஜ்வாதி கட்சியும்  - பகுஜன் சமாஜ் கட்சியும், நடைபெற்றுமுடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து  போட்டியிட்டன.இந்தக் கூட்டணி கங்கிரஸுக்கு ஆதரவாக  இருந்ததோ இல்லையோ ஆனால் பாஜகவை எதிர்த்துப் படு தீவிரமாக களமிறங்கினர். ஆனால் பாஜக  பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் இருகட்சிகளிடையே தற்போது விரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் மக்களவைத் தேர்தலில் கட்சி ஏன் தோல்வியைத் தழுவியது என்று மாயவதி கட்சியினருடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.அத்துடன் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தனித்துபோட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
 
அதனால் தற்போது கூட்டணியிலிருந்து விலக எடுத்துள்ள முடிவு தற்காலிகமானது என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டால் மறுபடி கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.
 
சமாஜ்வாதி கட்சியும் இடைத்தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.