செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (15:45 IST)

அஜித் - முருகதாஸ் கூட்டணி முறிவுக்கு இது தான் முக்கிய காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித். இவரை வைத்து படம் இயக்குவது என்பதே பல இயக்குனர்களின் கனவு ஆனால், இவரோ சமீப காலமாக தொடர்ந்து இயக்குனர் சிவாவுடனே பணியாற்றி வருகின்றார்.
 
இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் என்றால் அது "தீனா" தான் .அந்த படத்திலிருந்து தான் இவருக்கு "தல" என்ற டைட்டில் வந்தது.
 
இப்படத்தை இயக்கிய முருகதாஸ் அதன் பிறகு அஜித்துடன் இணையவில்லை, அதற்கான காரணத்தை தற்போது ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
 
அதாவது ‘அஜித் முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் படத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் அப்போது ஒரு சில பிரச்சனைகளால் அந்த படம் நின்றுவிட்டது. 
 
அப்போது முருகதாஸிடம் நடிகர் அஜித், கொஞ்சம் காத்திருங்கள் நானே இப்படத்தில் நடிக்கிறேன் என கூறினாராம்.
 
ஆனால், அதை கேட்காத இயக்குனர் முருகதாஸ் சூர்யாவுடன் "கஜினி" படத்தை தொடங்கிவிட்டார், அஜித்திற்கு இது மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.
 
அந்த காரணத்தாலே முருகதாஸுடன் அவர் இன்று வரை பணிபுரியவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.