வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (13:40 IST)

ஒரு யூனிட் மின் கட்டணம் 30% உயர்வு: ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம்!

தமிழகத்தில் மின் கட்டணம் 30% உயர்வதாக வெளியாகும் தகவ்ல் பொய் என மின்சார வாரியம் உண்மை தகவலை வெளியிட்டுள்ளது. 

 
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் வெளியாகியது. அதுவும் ஒரு யூனிட் மின் கட்டணம் 30% உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிய நிலையில் மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யென மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை. அதேபோல் மின் கட்டணத்தை உயர்த்த எந்த திட்டமும் இல்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.