செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (13:12 IST)

பக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் பஜ்ஜியை சுடுகிறார்: தமிழிசை கல கல!

இந்திய அளவில் பக்கோடா என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை டிரெண்ட் ஆக்கி விட்ட பெருமை அத்தனையும் நமது பிரதமரையே சேரும். இதில் கூகுளில் பக்கோடா என தேடியதில் தமிழகமும், புதுச்சேரியும் முன்னிலையில் உள்ளது.
 
பிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து பேசியபோது, ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதுவும் வேலைவாய்ப்புதானே என கூறியிருந்தார். அவ்வளவு தான் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பூதகரமாக்கிவிட்டனர்.
 
ஆங்காங்கே பக்கோடா ஸ்டால்களை திறந்து மோடியை விமர்சிக்கும் விதமாக பக்கோடா விற்கின்றனர். சில இடங்களில் படித்த பட்டதாரி இளைஞர்களை வைத்து பக்கோடா விற்று மோடியை விமர்சிக்கின்றனர்.
 
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தனது பங்கிற்கு பக்கோடா சுட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்நிலையில் ஒரு முதல்வராக இருந்து கொண்டு அவர் இப்படி செய்வது அழகல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் தமிழிசை, சுயதொழில் தேவை என்பதற்காகத் தன்னம்பிக்கையோடு பக்கோடா விற்கும் தொழில் செய்கிறார்கள் என்று இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததை விமர்சிக்கும் விதமாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பக்கோடா செய்து போராட்டம் நடத்துகிறார். பக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் அவர் பஜ்ஜியை சுடுகிறார். இளைஞர்கள் பக்கோடா சுடும் நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார்.