தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மாணவி தந்தைக்கு நோட்டீஸ்!
மதமாற்றம் செய்ய வலியுறுத்தபட்டதால் தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது
இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது