திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:52 IST)

ஹிஜாப் அணிய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் சென்ற மாணவிகள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுமதிக்கவில்லை
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையில் பள்ளி கல்லூரிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்றும் இந்த தீர்ப்பு வரும் வரை ஹிஜாப் அணிய தடை என்றும்,  கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிந்து வர கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.