புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:48 IST)

சிறப்பு சேவைக்கும் வழியில்லை: தமிழக அரசால் தடா போட்ட ரயில்வே!

சிறப்பு ரயில் சேவைகள் தமிழகத்தில் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் உள்பட எந்த போக்குவரத்தும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்டு 31 வரை ரயில் போக்குவரத்து இல்லை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இது வதந்தி என அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால், சிறப்பு ரயில் சேவைகள் மட்டும் இயங்கி வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து என சற்று முன் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.