தமிழகம் நோயின் பிடியில் இருந்து மீண்டு வெற்றிநடை போடும்: ஈபிஎஸ் நம்பிக்கை!
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பேருந்து உள்பட எந்த விதமான போக்குவரத்தும் இல்லை என்பதும் இதனால் மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி பெரிய ஆலயங்களில் வழிபாடுகள், கொண்டாட்டங்கள் என எதுவுமே இல்லாமல் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழா கொண்டாட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும் மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் முழுமையாக மீண்டு வெற்றிநடை போடும் எனவும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.