வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (18:43 IST)

7 மாவட்டங்களுக்கு நாளை, பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நாளை மதுரை, இராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது