புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (11:08 IST)

குட்டி பிரேமலதாவாக மாறும் ராதிகா? சரத்குமார் என்னவாக போறாரோ...

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தை நோக்கி ராதிகா. 

 
சின்னத்திரையில் இருந்து படிப்படியாகவிலகப் போவதாக அறிவித்துள்ள ராதிகா அவரது கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கட்சி மீட்டிங் ஒன்றில் கலந்துக்கொண்ட அவர் பின்வருமாறு பேசினார்... 
 
நான் இதுவரை எனது தொழில் காரணமாக அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால் இந்த தேர்தலில், சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடிப்பதை குறைத்து உங்கள் தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன். தேர்தல் காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும். 
 
உழைப்பால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.