1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:44 IST)

50 வருட பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி !!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழமையான கட்டிடம் இடிந்து  3 பேர் பலி. 

 
மதுரைபெரியார் பேருந்து நிலையம் அருகே  மேலவடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்தது.
 
தற்போது கட்டிட இடிபாடுகளை எடுத்து சென்ட்ரிங் போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ராமர் ,சந்திரன் ஜெயராமன் அழகர் வாசன் முனியசாமி ஆகிய 6 பேர் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.
 
திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் ராமர், சந்திரன், ஜெயராமன்  ஆகிய 3 பேர்  கட்டிட இடிபாடுகளில்  சிக்கி பலியாகியுள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மீதி மூன்று பேர்சிறு சிறு காயங்களுடன் தப்பி ஓடி வந்துவிட்டனர்.
 
இறந்த உடல்களை மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையான அனுமதி பெறாமல் வேலை நடைபெற்றதே இந்த விபத்திற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது, 
 
மதுரை திடீர் நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட இடிபாடு குறித்து காவல்துறையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.