1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (18:04 IST)

பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! நீதிமன்றம் அதிரடி

காற்றாலை மோசடி வழக்கில்  பிரபல  மலையாள நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளியில் ஐசிஎம்எஸ் என்ற பெயரில் காற்றாலை உபரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.
 
இதனையடுத்து காற்றாலை அமைத்துக்கொடுப்பதாக சொல்லி தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் 29 லட்சம் மற்றும் வெங்கடராமன், ஜோயோவிடம் ரூ.ஐந்தரை லட்சம் பெற்றுகொண்டு திரும்பித்தராமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. 
 
பின்னர், சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி, ஆகியோர் மீது மோசடி வழக்க்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில், இன்று, கோவை நீதிமன்றத்தில் நீதிபதி கண்ணன் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறினார்.
 
அதில் சரிதா நாயர், ரவி, பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகிய மூவருகும் 3 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரு. 10 ஆயிரம் அபரதம், விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை கட்டத்தவறினால் மேலும்  9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.