புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:13 IST)

காங்கிரஸ் எம்பி மனைவியின் சர்ச்சை பதிவு: வச்சு செஞ்ச நெடிசன்கள்

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் வீடியோக்களை பதிவு செய்த காங்கிரஸ் எம்பி ஒருவரின் மனைவிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வருகிறது 
 
கேரளாவில் உள்ள காங்கிரஸ் எம்பி பின் ஹிபி என்பவரது மனைவி அன்னா லிண்டா என்பவர் தனது பேஸ்புக்கில் 2 வீடியோக்களை பதிவு செய்துள்ளார். ஒரு வீடியோவில் தனது குழந்தையை வெள்ளை காரணமாக மீட்புப்படகில் ஏற்றுவது போன்றும், இன்னொரு வீடியோவில் அவரது கணவர் ஹிபி ஐஸ்க்ரீம் ஒன்றை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது போன்றும் உள்ளது.
 
இந்த வீடியோக்களில் அவர் தலையெழுத்தும் பலகாரத்தை போன்றதுதான், ஒருவேளை உங்களால் தடுக்க முடியாவிட்டால் அனுபவிக்க வேண்டிய தான்’ என்று பதிவு செய்திருந்தார். அதாவது இவரது வீடு வெள்ளத்தால் வெள்ள நீரால் சூழ்ந்துவிட்டதை சொல்வதற்காக இந்த வீடியோவை அவர் பதிவு செய்ததாகவும் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோவை பதிவு செய்ததால் நெட்டிசன்கள் அவரை வச்சு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னா லிண்டா மீண்டும் ஒரு பதிவில், ‘மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து குறிப்பிடவே அந்த வீடியோக்களை பதிவு செய்ததாகவும், ஆனால் தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.