புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:38 IST)

தொடரும் எதிர்ப்பு - ஹெச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 
 
தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான வசனம் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர்.
 
மேலும், விஜய் தனிப்பட்ட முறையில் மதம் தொடர்பாக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹெச்.ராஜா. இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையினர் பலர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால், வடபழனியில் உள்ள அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.