தமிழகத்தில் தீக்குளிப்பு அதிகரிக்க என்ன காரணம்: எச்.ராஜா


sivalingam| Last Modified செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:07 IST)
தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகம் நிகழ் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 
 
இந்தியாவில் வேறு எங்கும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. தமிழகத்தில் மட்டும் நடைபெற காரணம், பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் அறிவை மழுங்க செய்துவிட்டதுதான்
 
பெரியார் தொடங்கி திராவிட இயக்கங்கள் அனைத்தும் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வருவதால் மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆன்மீக நம்பிக்கை அதிகம் இருந்தால்தான் தைரியம் வரும் இந்த தீக்குளிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகம் நிகழ இதுவும் ஒரு காரணம் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :