ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (15:53 IST)

இட ஒதுக்கீடு லேட் ஆகும்னா உள் ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பிருக்கா? – அரசுடன் டீல் பேசும் பாமக!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்கு முன்பாக இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பாமக தயாராகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் பாமக வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் பாமக – அதிமுக கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த தமிழக அமைச்சர்கள் இடஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்து ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக சிறப்பு நிர்வாக கூட்டத்தில் இட ஒதுக்கீடு பரிந்துரைக்கு தாமதம் ஆகுமென்றால் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3ம் தேதி தமிழக அரசு குழுவுடன் பாமகவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் அதன் முடிவுகளை பொறுத்தே கூட்டணி குறித்தும் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.