கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம்! – தொடங்கி வைத்தார் முதல்வர்!
தமிழகத்தில் சமயபுரம் உள்ளிட்ட மூன்று கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் முக்கியமானவையாக சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகியவை உள்ளன.
இந்த கோவில்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதால் இந்த கோவில்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.