ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (15:16 IST)

ஜெயலலிதா போல் செயல்படுவோம்.. விருதுநகரில் உதயநிதி பிரச்சாரம்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைய விடவில்லை, அதே போல் ஜெயலலிதா வழியில் நாங்களும் செயல்பட்டு நீட் தேர்வை விரட்டி அடிப்போம் என விருதுநகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்

சட்டசபை தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஆன பெண்களுக்கு கட்டணம் இல்லாத பேருந்து, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவற்றை செய்து காட்டியுள்ளோம்

ஒரு கோடி 60 லட்சம் பேருக்கு மேல் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது, இதுவரை பலன் பெறாத மற்ற பெண்களுக்கும் விரைவில் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்வோம்

நியாயமாக தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை கேட்டால் கூட மத்திய அரசு தர மறுக்கிறது. எனவே மத்திய அரசு நாமாக இருந்தால் மட்டுமே அனைத்தையும் மிக எளிதாக பெற முடியும் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்


Edited by Siva