புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:56 IST)

டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் பொருட்கள்!

ரேஷன் கடைகளில் உள்ள சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.