1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:29 IST)

அண்ணாத்த திரைப்படத்தோடு வெளியாகும் பீஸ்ட் முதல் சிங்கிள்!

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி அன்று அண்ணாத்த திரைப்பட வெளியீட்டு போது வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.