செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:46 IST)

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதைக் காண முடிகிறது.

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து விட்டதாகவும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 13 (இன்று), 16, மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் டிசம்பர் 17ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், அதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva