1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2024 (16:41 IST)

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

duraimurugan
ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட் போட்டாலும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அமைச்சர்கள் துரைமுருகன், தாமோ அன்பரசன் ஆகியோர் ஆய்வு சென்றனர். ஆய்வுக்கு பின் நிருபர்களுக்கு துரைமுருகன் பேட்டி அளித்தார்.

அப்போது, "ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி, ஆப்பிள் அலர்ட் போட்டாலும் சரி, செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், "குப்பைகளை எங்கே கொட்ட வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும். செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் மக்கள் குப்பைகளை கொட்ட கூடாது. சரியான இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

"குப்பைகள் போன்ற எதுவாக இருந்தாலும், அதை ஏரியில் தான் கொட்டுகிறார்கள். ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் குப்பைகளை கொட்டி கொட்டியே பாலாறு மிகவும் மோசமாகிவிட்டது. ஆகையால் மக்களுக்கு அந்த விழிப்புணர்வு வரவேண்டும்" என்றும் அவர் கூறினார்.

நீர்வளத்துறைக்கு சொந்தமான 40,000 ஏரிகளை தூர்வாரும் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "ஒரு பக்கம் தூர்வாரினால் இன்னொரு பக்கம் நின்று விடுகிறது. எல்லாவற்றையும் தூர்வார நிதி ஆதாரம் இல்லை. நிதி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்தையும் தூர் வாருவது ஒரே நேரத்தில் இயலாத காரியம்" என்றும் அவர் பதிலளித்தார்.


Edited by Siva