தொடர்புடைய செய்திகள்
- இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்.. காத்திருக்குது மிக பலத்த மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!
- டிசம்பர் 12ல் தமிழகத்தில் ரெட் அலெர்ட்! மிக கனமழை வாய்ப்பு! - இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
- இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!
- வங்க கடலில் உருவாகும் தற்காலிக புயல்? கரை கடக்கும் முன்னர் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!
- கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகளும் முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் மக்களிடையே சற்று கலக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
