அற்புதம் அம்மாள் வீடியோவைப் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!
பேரறிவாளன் சிறைக்கு சென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.
இது சம்மந்தமாக பேரறிவாளனுக்கு விடுதலைக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் தன் மகனின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக போராடி வரும் அற்புதம் அம்மாள் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மேலும் இந்த தாயின் 31 ஆண்டுகால போராட்டத்துக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.