வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (12:01 IST)

வேலூர் மாவட்டத்தில் அதிகமாகும் சாராயப் புழக்கம்… அதிகாரிகள் சோதனை!

வேலூர் மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது. அது போல சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து அதிகாரிகள் ஆபரேஷன் விண்ட் என்ற பெயரில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.