வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (17:56 IST)

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் !

சினிமாவில் பிரபல இயக்குநர்களின் படங்களுக்க்கு ஒளிப்பதிவாளராக இருந்து காவியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பாளர் கண்ணன் இன்று காலமானார்.

இவர் இயக்குநர் பாரதி ராஜாவுடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

அதில், காதல் ஓவியம்,  அலைகள் ஓய்வதில்லை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் அற்புதமாக தனது  படைப்பாற்றலை வெளிப்படுத்தி  ரசிகர்களுக்கு சினிமாவில் காட்சி விருந்து வைத்த ஒளிப்பதிவாளார் கண்ணன்( 69)  இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ள போதிலும் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

அதனால் மருத்துவமனைவில் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மதியம் காலமானார். அவரது மறைவை ஒட்டி சினிமா பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது மறைவு குறித்து வைரமுத்து தனது தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் கவிதை பதிவிட்டுள்ளார். அதில்,

பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும்
கலைக் கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன்.
என் முதல் பாடலான
பொன்மாலைப்பொழுதுக்குத் தங்கம் பூசியவர்.
தேசியவிருது பெற்ற என் 7பாடல்களில்
2பாடல்களை ஒளிபெயர்த்தவர்.
குணவான் ஆகிய கனவான்.
அவர் மறைவால் இந்த உலகம் ஒருகணம்
நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.என்று தெரிவித்துள்ளார்
.