புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பாமகவுக்கு தேர்தலுக்கு முன்பே கிடைத்த வெற்றி: மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதனால தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை பாமக இழந்தது. இதனால் வரும் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது 
 
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகள் ஒரே சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் வழக்கம் உண்டு.
 
அந்த வகையில் வரும் தேர்தலில் 23 தொகுதிகளை அதிமுக கூட்டணியிலிருந்து பெற்ற பாமக அதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு உரிய மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென விண்ணப்பித்திருந்தது. இதனை அடுத்து பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை என்று ஒதுக்கி உள்ளது
 
23 தொகுதிகளை வெற்றிகரமாக பெற்று மாம்பழம் சின்னத்தையும் பெற்றுள்ளதால் தேர்தலுக்கு முன்பே பாமகவுக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. 23 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் பாமக வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்