செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (22:07 IST)

பாமகவின் 23 தொகுதிகள் எவை எவை? ஸ்டார் ஓட்டலில் ஆலோசனை!

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்ற பாமக, இன்று காலை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்பதை பார்த்தோம் 
 
அதிரடி அறிவிப்புகள் இருந்த அந்த தேர்தல்அறிக்கை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாமக நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் 
 
சென்னையில் உள்ள தனியார் ஸ்டார் ஓட்டலில் திமுக மற்றும் பாமக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். பாமக சார்பாக ஜிகே மணி, ஏகே மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இருப்பதாகவும் இன்று இரவுக்குள் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது