1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (19:42 IST)

உச்ச நீதிமன்றம் தடையை மீறி நடக்கும் திமுக பொதுக்கூட்டம்; பதற்றத்தில் திருச்சி

உச்ச நீதிமன்றம் தடையை மீறி திமுக திருச்சியில் அறிவித்தபடி பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் திமுக சார்ப்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
 
தற்போது திருச்சியில் திமுக உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் காவல்துறை எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
 
திமுக கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் சற்று முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.