திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:06 IST)

தீபாவளிக்கு முதல் நாள் பயணம்; இன்று முதல் புக்கிங்! – போக்குவரத்துக்கழகம்!

TNSTC
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.


இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 23ம் தேதியன்று பயணம் செய்ய உள்ளவர்கள் அரசு பேருந்துகளின் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC செயலி மூலமாகவும், நேரடி முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.