செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (18:32 IST)

ஸ்டாப்பிங்ல பஸ் நிக்கலையா.? 149 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க.!

Bus
சென்னை மாநகராட்சி பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காவிடில் பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லாத எண்ணிற்கு போன் செய்து புகார் அளிக்கலாம் என மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 
 
சென்னையில் அரசு போக்குவரத்து பேருந்து சேவை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.  சென்னை மாநகராட்சியில் மொத்தம்  625 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 
இந்த 625 வழிதடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 3436 பேருந்துகளை நாள் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகின்றது.  இந்த பேருந்து சேவைகள் மூலம், நாள்தோறும் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்.  
 
இதில், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும்  சீசன் டிக்கெட் உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகின்றது. 

 
இந்நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க, குறிப்பாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லாத எண்ணிற்கு போன் செய்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.